மணத்தக்காளி கீரை சூப்.....!

  



தேவையான பொருட்கள் (2 நபர்களுக்கு):

மணத்தக்காளி இலை காய்கள் :50 கிராம்
பட்டை :ஒன்று
ஏலக்காய் :ஒன்று
லவங்கம் :ஒன்று
பிரிஞ்சி இலை :ஒன்று
தண்ணீர் :அரை லிட்டர்
வெங்காயம் :10 கிராம்
திப்பிலி :2
எண்ணெய் :கால் டீஸ்பூன்

செய்முறை :
மணத்தக்காளி இலையை தனியாக ஒரு டம்ளர் நீர் விட்டு வேகவைத்து, தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ,பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு பொரிந்தவுடன், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும். அதனுடன் வடிகட்டிய மணத்தக்காளி கீரை சேர்த்து மீதியுள்ள நீரை ஊற்றி சிறு தணலில் அரைமணி நேரம் சீராக கொதிக்கவைத்து, வடிகட்டி தேவையான உப்பு பொடித்த திப்பிலி தூவி சூடாக பருகவும்.


சத்துக்கள்:

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சி சத்துக்கள் நிறைந்தது

பயன்கள்:

வாய் முதல் உணவுப்பாதை வயிறு வரை திறமையாக செயல்படும். இந்த சூப் குடல் புண்ணை விரைவில் ஆற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.



👉👉நம்முடைய அன்றாட உணவை மருந்தாக்குவோம்.....!!!!


👉👉ஆரோக்கியமான வாழ்வை பெறுவோம்.......!!!!

No comments:

Post a Comment