வேப்பந்துளிர் தேநீர்

 

👇👇தேவையான பொருட்கள்: 

வேப்பந்துளிர் பொடி (நிழலில் உலர்த்திய தூள்) :அரை ஸ்பூன் 

வில்வ இலையை (நிழலில் உலர்த்தியது) : கால் ஸ்பூன் 

துளசி இலை 5.



👇👇செய்முறை: 

                 வேப்பந்துளிரைப் பறித்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து கண்ணாடிக் குடுவைகளில் காற்று புகாமல் அடைத்து வைத்துக்கொள்ளவும். அதேபோல் வில்வ இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தனியே காற்று புகாமல் குடுவையில் அடைத்துக் கொள்ளவும். துளசியைப் பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது கொதித்தவுடன் வேப்பந்துளிர் வில்வ இலைப் பொடிதுளசி இலையைப் போட்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி துணி கொண்டு வடிகட்டிய தேநீரில் தேவையான சர்க்கரையை கலந்து பருகவும். வேப்பந்தழை பச்சையாக பயன்படுத்துவது மிகச் சிறந்த பலனை அளிக்கும். வேப்ப இலைகளை வயிற்றுப்புண் ஆற்றும் கிருமிகளைக் கொள்ளும் பண்பும் இணைந்து காணப்படும். வில்வமும் இதற்கு சளைத்ததல்ல பாக்டீரியா கொல்லிப் பண்புடன் பித்த நிலையை சமப்படுத்தி புண்ணாற்றும்  இயல்பு கொண்டது. துளசி நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் இயல்பு கொண்டது. இது பாக்டீரியாக்களின் எதிரி. இம்மூன்றும் பச்சையாக போட்டு தேநீர் வடித்து அருந்துவது முதல்தரம். நகரங்களில் இதைத் தேடி அலைய முடியாதவர் இவற்றை சேகரித்து வீட்டினுள்ளே நிழலில் உலர்த்தி பொடி செய்து பயன்படுத்தவும். 

பயன்கள் :

காலை எழுந்தவுடன் உட்கொள்ளப்படும் இந்த தேனீர் அல்சரை குணப்படுத்த முதல்படியாக உபயோகிக்கும் உணவுமுறைதேனீர் தேவை ஏற்படும்போது சமயங்களில் இதை பயன்படுத்திஅல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

💪💪குறள் 948:

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

மு. வரதராசன் உரை:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment