மணத்தக்காளி கீரை மசியல்...!

 


தேவையான பொருட்கள்:


  1. மணத்தக்காளி காய் :100 கிராம்
  2. மணத்தக்காளி கீரை :40 கிராம் 
  3. சாம்பார் வெங்காய துண்டுகள் : 50 கிராம் 
  4. கருவேப்பிலை : 10 கிராம்
  5. வேகவைத்த பாசிப் பருப்பு : 50 கிராம்
  6. புதினா இலை : 50 கிராம் 
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் :அரை ஸ்பூன்


செய்முறை :


வேக வைத்து மசித்த பாசிப்பருப்பை தனியாக வைக்கவும். சிறிது தண்ணீர் விட்டு மணத்தக்காளி தழை,காயை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். எண்ணையை காயவைத்து வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி அதில் தக்காளி கறிவேப்பிலை புதினா சேர்த்து வதக்கி, அதை மசித்த பாசிப்பருப்பு, மணத்தக்காளி உடன் உப்பு போட்டு மீண்டும் நன்றாக மசித்து பரிமாறவும். 


        மிளகாய் / மிளகு காரம் இல்லாத இந்த மசியல் மிகுந்த மாறுபட்ட சுவையுடன் இருக்கும் மருந்தாக உண்ண, உணவின் சுவை இல்லாவிட்டாலும் ருசித்து சாப்பிட வைக்கும். மதிய உணவில் கட்டாயம் உபயோகிக்க வேண்டியது.


சத்துக்கள்:

        இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சி சத்துக்கள் நிறைந்தது

பயன்கள்:


        வாய் முதல் உணவுப்பாதை வயிறு வரை திறமையாக செயல்படும். இந்த சூப் குடல் புண்ணை விரைவில் ஆற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.




👉👉நம்முடைய அன்றாட உணவை மருந்தாக்குவோம்.....!!!!


👉👉ஆரோக்கியமான வாழ்வை பெறுவோம்.......!!!!

No comments:

Post a Comment