விளாம்பழ ஜூஸ்...!

 

 தேவையான பொருட்கள்:

  1. விளாம்பழ துருவல் 100 கி
  2. வெல்லம் 50 கி
  3. உப்பு தேவையான அளவு 

செய்முறை :

        நன்கு பழுத்த விளாம்பழத்தை துருவி நன்றாக மிக்ஸியில் போட்டு கூழாக்கி, அதில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றி, மீண்டும் அரைத்து வெல்லம், சர்க்கரை சேர்த்து அருந்தவும். இது அதிக எரிசக்தி அளிக்கும் தன்மையுடையது. இது மாம்பழ சீசன் முடிந்த உடன் கிடைக்கும் பழம். சிறிது இனிப்பும் கலந்த புளிப்பு சுவையுடைய இந்த விளாம்பழம் பெரும்பான்மையா  உண்ணப் படுவதில்லை.

விநாயகர் சதுர்த்தியன்று சம்பிரதாயத்திற்காக உபயோகிக்கப்படும். இந்த விளம்பரம் மருத்துவ குணம் கொண்டது. பித்தத்தை கட்டுப்படுத்தும்.  வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் தன்மையுடையது.

        அல்சர் நோய்  உடையவர்கள், விளாம்பழ ஜூஸ் சாப்பிட்டு அல்சரை குணப்படுத்தும் முயற்சியில் வெற்றி காணலாம்.

பயன்கள்:

வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

No comments:

Post a Comment