வெண்பூசணி அல்வா ......!

 

தேவையான பொருட்கள் 

  1. வெண்பூசணி துருவியது 200 கிராம் 
  2. வெல்லம் 300 கிராம் 
  3. நெய் 50 கிராம் 

செய்முறை : 

        பூசணி துருவலை நன்றாக ஆவியில் வேகவைத்து, அதில் முக்கால்பங்கு நீரை ஊற்றி நன்றாகப்  பிழிந்து எடுத்து, அதில் வெல்லத்தைச் சேர்த்து சிறு தீயில் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன், நெய்ச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இது அதிக எரிசக்தியை அளிக்கக்கூடியது.



    மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது. எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையது. வயிற்றில் கார அமில சமநிலை காக்கும் இயல்பு கொண்டது. வாரம் மூன்று நாள் தவறாமல், இந்த அல்வாவை சாப்பிட்டு வயிற்றை அமில கார தன்மையைச் சமநிலையில் வைக்கலாம்.

பயன்கள்:

  1. வயிற்றின் அமில கார தன்மை சமநிலை
  2. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment