வாழைப்பழ சாதம்....!

  

தேவையான பொருட்கள்:


பழுத்த ரஸ்தாளி பழம் அல்லது செவ்வாழை 

நெய் கால் ஸ்பூன் 

புழுங்கலரிசி சாதம் உன்ன தேவையான அளவு 

வெல்லம் பொடித்தது ஒரு ஸ்பூன் 


 

செய்முறை:

சாதம் சூடாக இருக்கும் பதத்திலேயேவாழைப்பழத்தை உரித்து நன்றாக பிசைந்து சிறிது வெல்லம்நெய் ஆகியவற்றை கலந்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு கவளமாக உருட்டி வைத்து சாப்பிடவும். 

 இந்த வாழைப்பழ சாதத்திற்கு புழுங்கலரிசியை இருமுறை வேக வைத்து வடித்து பயன்படுத்துவது நல்லது. 

 
எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த சாதம் அல்சர் மிக தீவிரமாக இருக்கும் சமயங்களில் மிகவும் உறுதுணை செய்யும் உணவு. உணவு இடைவேளைகளில் அல்சர் குணமாக ஆரம்பித்தவுடன்முற்றிலும் குணமாகவும் கட்டாயம் உண்ண வேண்டியது. அதேபோல் அல்சரின் ஆரம்பக் கட்டங்களில் உபயோகிக்கச் சிறந்தது. 

 அல்சர் வந்தவர் சாப்பிடவே பயப்படுவார் அதனால் மிக மிக எளிதில் ஜீரணமாகக் கூடிய எரிச்சல் ஏற்படுத்தாத இந்த வாழைப்பழம் வாழைப்பழம் வந்தாலும் எளிதில் ஜீரணமாகும் குணத்தாலும் இருமுறை பாதுகாப்பு அளிக்கும் உணவு. 

 ஹோட்டல்களில்,மேன்ஷன்களில் சாப்பிட்டுக் காலம் தள்ளும்  நபர்கள் அல்சர்  தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த வாழைப்பழ சாதத்தை ஒரு வரப்பிரசாதமாக கருதி உண்டு ஆரோக்கியம் காக்கலாம்.

No comments:

Post a Comment