தேவையான பொருட்கள்:
- ஒரு நீக்கிய மாம்பழ கொட்டை பருப்பு 50 கிராம்
- பாசிப்பருப்பு 15 கிராம்
- சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்
- கருவேப்பிலை 5 கிராம்
- கொத்தமல்லி 5 கிராம்
- ஆம்சூர் பொடி அரை ஸ்பூன்
- எண்ணெய் அரை ஸ்பூன்
- தக்காளி ஒன்று
- உப்பு தேவையான அளவு
- சீரகம் கால் ஸ்பூன்
செய்முறை :🥣🥣
பாசிப் பருப்பை நன்றாக வேகவைத்து கடைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய வைக்கவும் தக்காளியை நறுக்கி போட்டு அதனுடன் ஆம்பூர் பொடி உப்பு சாம்பார் பொடி போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வரும் சமயம் பச்சை மாங்கொட்டை பருப்பை வில்லைகளாக நறுக்கி போட்டு, நன்றாக வேகவிடவும் வெந்தவுடன் அதில் கடைந்து வைத்துள்ள பாசிப்பயிர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெய் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய வைத்து, அதில் சீரகத்தைப் பொரியவிட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும். குடல் புண் ஆற்றும் இயல்பில் மாங்கொட்டை பருப்பு முதலிடம் பெறும். இதில் உள்ள துவர்ப்பு சக்தி உடலின் எல்லா பாகத்திலும் செயலாற்றக் கூடியது. மாம்பழ சீசனில் வாரத்தில் நான்கு நாட்கள் செய்து சாப்பிடுவது நல்லது.
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சி சத்துக்கள்.
பயன்கள்:

No comments:
Post a Comment