மாங்கொட்டை பருப்பு பொடி ....!

 

 

தேவையான பொருட்கள்:👉👉

  1. சிறு துண்டுகளாக நறுக்கிய மாங்கொட்டை பருப்பு 100 கிராம்
  2. துவரம் பருப்பு 100 கிராம் 
  3. கடலை பருப்பு 50 கிராம் 
  4. பட்டை 10 கிராம் 
  5. கிராம்பு 10 கிராம் 
  6. உலர்ந்த கறிவேப்பிலை 20 கிராம்
  7. உலர்ந்த மணத்தக்காளி கீரை 50 கிராம் 
  8. உலர்ந்த வல்லாரை கீரை 50 கிராம்
  9. உப்பு தேவையான அளவு 

செய்முறை :👇👇


துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் சூடான வாணலியில் தனித்தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் மாவாக பொடி செய்து கொள்வோம். அதேபோல் உலர்ந்த மாங்கொட்டை துண்டுகளை மணம் வரும் வரை வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அதேபோல் பட்டை கிராம்பு இரண்டையும் வறுத்து பொடியாக்கி கொள்ளவும். தனித்தனியே மணத்தக்காளிக்கீரை, வல்லாரை, கறிவேப்பிலை மூன்றையும் மணம் வரும் வரை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். அனைத்து பொடிகளையும் உப்பையும் ஒன்றாக கலந்து நன்றாகக் கிளறி சீரான கலவையாக ஆக்கி காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் அடைத்துக் கொள்ளவும்.சாப்பிட ஆரம்பிக்கும் முன் மூன்று கவள சாதத்திற்கு தேவையான பொடியை அந்த அளவு சாதத்தின் மேல் தூவி நல்லெண்ணெய் சிறிது விட்டு பிசைந்து சாப்பிடவும். சிறந்த மருத்துவ பண்புகளை கொண்ட இந்த பொடி அல்சர் நோய்யை குணமாக்கும் பண்பு கொண்டது. நோயின் தீவிரம் பொறுத்து இந்த பொடியை ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டால் குணம் பெறலாம். அனைத்து மாங்கொட்டை சமையல் களுடன் கட்டாயமாக துணைப் பொருளாக மணத்தக்காளி வகை சமையலை பயன்படுத்தினால் துரித குணம் ஏற்படும்.
சத்துக்கள்:

        இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சி சத்துக்கள் நிறைந்தது

பயன்கள்:


        குடல் புண்ணை விரைவில் ஆற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


👉👉நம்முடைய அன்றாட உணவை மருந்தாக்குவோம்.....!!!!




👉👉ஆரோக்கியமான வாழ்வை பெறுவோம்.......!!!!

No comments:

Post a Comment