மாங்கொட்டை பருப்பு துவையல்...!

 

 👉👉தேவையான பொருட்கள்
  1. பொடியாக நறுக்கிய மாங்கொட்டை பருப்பு 50 கிராம் 
  2. ஆம்சூர் 15 கிராம் 
  3. வெங்காயம் 20 கிராம் 
  4. திப்பிலி 5 கிராம் 
  5. பட்டை 5 கிராம் 
  6. எண்ணெய் அரை டீஸ்பூன் 
  7. உப்பு தேவையான அளவு 

👉 செய்முறை:


 வாணலியில் எண்ணெயை நன்றாக காய வைக்கவும். அதில் பொடியாக நறுக்கிய மாங்காய் போட்டு வதக்கி பொன்னிறமானதும், வெங்காயத்தை சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கி பின் அம்மியில் வைத்து அரைக்கவும். திப்பிலி பட்டை, உப்பு ,ஆம்சூர் பொடி சேர்த்து அனைத்தையும் மைய அரைத்து சாதத்துடன் சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும். மாம்பழ சீசனில் அடிக்கடி செய்து சாப்பிட வேண்டியது அவசியம்.


சத்துக்கள்:

        இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சி சத்துக்கள் நிறைந்தது

பயன்கள்:


        குடல் புண்ணை விரைவில் ஆற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


👉👉நம்முடைய அன்றாட உணவை மருந்தாக்குவோம்.....!!!!


👉👉ஆரோக்கியமான வாழ்வை பெறுவோம்.......!!!!

No comments:

Post a Comment